Archive for May, 2014

எனது இரண்டாவது சிறுகதை சொல்வனம் 106 வது இதழில் வெளிவந்துள்ளது.ஆசிரியர் குழுவிற்கு ஆழ்ந்த நன்றிகள்.

எனது கிராமத்தில் நான் கண்ட காட்சிகளின் படிமம் தான் இந்தக் கதை.:)

http://solvanam.com/?p=33432

Advertisements

அறிவியல் புத்தகத்தின் கிழிந்த 
அறுபதாவது பக்கத்தை ஒட்ட வேண்டும்
எண்டோபிளாச வலையின் குறுக்கு வெட்டுத்தோற்றம் 
நெடுக்காக கிழிந்திருந்தது
சீமக்கருவேல மர பிசுக்கு
ஆமணக்கு இலையின் அடிப் பிசின்
முருங்கமரத்தின் பிசின் 
எச்சில் என அனைத்தும் கொண்டு
ஒட்ட முயற்சித்து தோற்று
கடைசியாக சோற்று பசை கொண்டு ஒட்டினாள்.
எனினும் படிப்பதற்கு காவ்யாவின் புத்தகத்தைத்தான்
வாங்க வேண்டியிருந்தது பரீட்சைக்கு முந்திய நாள்..!!

சைபர் பார்க் என்ற பெயரே கொஞ்சம் கிளுகிளுப்பாக இருப்பதால்,ஆபீஸ்லாம் சும்மா ரணகளமாசென்ட்ரலைஸ்டு ஏசி வச்சி பளபளன்னு இருக்கும்னு ஒரு மகா கற்பனையோட ரெண்டு வருடத்திற்கு முன்னால் இங்க வந்து சேர்ந்தேன்.டைல்ஸ் போட்ட மாட்டுத்தொழுவத்தில் நாலஞ்சு டேபிள்,சேர் போட்டு சிஸ்டம குடுப்பாங்கன்னு சத்தியமா அப்ப எனக்கு தெரியாது.அதுவும் ஒரு செகண்ட் கூட தாக்குப்பிடிக்காத விஸ ஜந்துவான UPS அயும் சேர் த்துகொடுப்பாங்கன்னும் நினைக்கல.அதை UPS என்று அழைக்க கூச்சமாக இருந்ததால் IPS என்று செல்லமாக கூப்பிடுவேன்.

இந்த இரண்டு வருட காலத்தில் இரண்டு முறை SMPS மாற்றியிருக்கிறேன் திருவாளர் UPSஅவர்களின் கையாலாகாத தனத்தால்.திருவாளர் UPS அவர்கள் மின்சார வாரியத்தைக் குறைகூறினார்.இரண்டு வாரத்திற்கு முன்பு தொடர்ச்சியாக நான்குமுறை மின்சாரம் போய் வந்தது.ஐந்தாவது முறை வரும்போது பெருமதிப்பிற்குறிய அண்ணன் மானிட்டர் அவர்கள் விதவிதமான ஜந்துக்களை திரையில் காண்பித்தார்.

”நீ ரெண்டு நிமிஸத்தில ஏதாவது ஒரு பட்டன அமுக்கலனா ரத்தம் கக்கி சாவாய்”என்பது போன்ற ஒரு மிரட்டல் விடுத்தார்.நானும் எதற்கடா வம்பு என்று  பட்டனை தட்ட எத்தனிக்கும் போது திருவாளர் மின்சாரம் அவர்கள் மறைந்து விட்டார்.மின்சாரம் அவர்கள் வந்த பின்பு அண்ணன் மானிட்டர் அவர்கள் கண்திறக்கவே இல்லை.பின் சிறிது நேரம் கழித்து தானாகவே கண் திறந்து பார்த்து ஏதேதோ தனக்குள்ளே முனங்கிக் கொண்டார்.ஆங்கில அனைத்து எழுத்துக்களையும்,கீ போர்டிலுள்ள அனைத்து குறியீடுகளையும் கொண்டு ஒரு மாபெரும் அணிவகுப்பு நடத்தினார்.

இவர்களை நம்மால் கட்டுப்படுத்தமுடியாது என்றெண்ணி MATRIX HARDWARES என்று அழைக்கப்படும் அதி நவீன ஹார்ட்வேர் கடைக்கு அட்மின் நண்பர்களிடம் கொடுத்தனுப்பினேன். அது ஒரு சனிக்கிழமை.நல்ல காலத்திலேயே சேட்டன்மாரு ரெம்ப மருவாதியா பேசுவாவ அதுவும் சனிக்கிழமை கேட்கவா வேண்டும்.”அங்க வச்சிட்டுப்போ அடுத்த வாரம் பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.அடுத்தவாரம் செவ்வாய்கிழமை அவரை அழைத்தேன்.கடை ரெனோவேஸன் நடப்பதால் இன்னும் பார்க்கவில்லை என்றார்.எப்போது ரெனோவேஸன் முடியும் என்று கேட்டால் சேட்டாவின் ரத்த அழுத்தம் கூடக்கூடும் என்பதால் எப்பொழுது சரி பார்க்க முடியும் என்று கேட்டேன்.இரண்டு நாளில் கூறுகிறேன் என்றார்.இனி ஒரு வார்த்தை அவரிடம் அதிகம் பேசினால் என்ன ஆகும் என்பதை உணர்ந்திருந்ததால் தொடர்பை துண்டித்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து அழைக்கும்போது SMPS போயிருக்குமென்று நினைக்கிறேன் என்று குத்துமதிப்பாக சொன்னார்.நண்பர் மானிட்டர் அவர்கள் கடைசியாக சிலபல குறியீடுகளைக் காண்பித்ததால் SMPS போயிருக்க வாய்ப்பில்லை என்று தீர்மானமாக்க் கூறினேன் வாய்க்கொழுப்பால்.”அப்போ நீயே வந்து பாத்துக்கோ”என்றார்.ஐயா தாங்கள் ஒன்றும் பிட்டுக்கு மண் சுமக்கவில்லை.தங்கள் பணிக்கு தக்க ஊதியம் கொடுக்கவே செய்வேன்”என்று சொல்ல எண்ணி வேண்டாம் என்று இணைப்பைத் துண்டித்தேன்.

மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து அழைத்தேன்.HARD DISC போய் விட்டது என்றார்.இதுவும் SMPSக்கு கூறியதுபோல் பொய்யாக இருக்கவேண்டும் என்ற என் ஆசையை ஒரு லாரி குப்பை கொண்டு மூடினார்.அப்பொழுதுதான் பென்டிரைவிலுள்ள எல்லா டேட்டாக்களையும் பார்மட் செய்யவேண்டுமென்று இதற்கு மாற்றியிருந்தேன்.அதுவும் போக சைபர் பார்க்கின் ஜாதகம் முழுவதும் அதற்குள் தான் என்பதால் “எப்படியாவது டேட்டாஸ் மட்டும் எடுத்து கொடுத்து விடுங்கள்” என்றேன்.முயற்சி செய்கிறேன் என்றார்.முயற்சி அதானே எல்லாம்!!.அதானே.!!

அதன்பின் இரண்டு நாட்களாக முயற்சி செய்தும் எதுவும் கிடைக்கவில்லை.இரண்டு நாட்கள் என்பது சேட்டனின் அகராதியில் யாதெனில் எனது அழைப்புக்கு பிந்தைய ஐந்து நிமிடங்கள்தான்.சரி இனி நேரடியாகச் சென்று விடலாம் என்று உறுதிப்படுத்த அவருக்கு அழைத்தேன்.வரவேண்டாம் என்று கெட்ட வார்த்தையில் திட்டியிருந்தால் கூட சென்றிருப்பேன்.ஆனால் பாசமான குரலில் ரெடி ஆனதும் நானே அழைக்கிறேன் என்றதும் காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது.அதேதான் இன்பத்தேன்.

அவர் அழைக்காத்தால் அடுத்த நாள் நானே அழைத்தேன்.பொதிகை மலையின் தமிழ் குடித்து வளர்ந்த என்னிடம் ஆங்கிலத்திலும்,மலையாளத்திலும்,ஹிந்தியிலும்,”உங்கிட்ட அஞ்சு ரூபாய்க்கு கம்மியாதான் பேலன்ஸ் இருக்கு ஒழுங்கா ரீஜார்ஜ் பண்ணு”என்று அறிவுறை கூறியது வோடபோனில் பணிபுரியும் அந்தப்பெண்.பொறுமை காத்து சேட்டனை லைனில் எடுத்தேன்.வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறினார்.அடைந்த சந்தோசத்தை வார்த்தைகளில் கூறினால் காவல்கோட்டம் நாவலைவிட அதிகபக்கம் பிடிக்கும் என்பதால் இத்தோடு முடிக்கிறேன்.

“இந்தா உன் HARD DISCஎன்று கையில் அதைக் கொடுத்தார்.அடே!மடப்பயலே நீயாடா எனது அனைத்து டேட்டாக்களையும் களைந்து என்னை நிராயுதபாணியாக்கினாய்.நம்பவே முடியவில்லை.CPUவை எடுத்து வந்தார்.முன்பக்கம் முழுவதும் கோடையில் காய்ந்து போன குளத்து தரை போல் வெடித்திருந்தது.என்ன சேட்டா உடைஞ்சிருக்கு என்றேன்.இது தரும்போதே அப்படிதான் இருந்தது என்றவரிடம் நான் என்ன சொல்ல முடியும்.”டேய் தடிப்பயலே ஏனடா உன்னை நீயே வதைத்துக் கொள்கிறாய்”என்று CPUக்கு அறிவுறை கூறி நாலாயிரம் ரூபாய் பில் கட்டி அழைத்து வந்தேன்.

அத்தனையும் செய்துவிட்டு சோர்ந்து போய் இருந்தார் உயர்திரு HARD DISCஅவர்கள்.

கதைச்சுருக்கம்:HARD DISCபோச்சு.மாத்த குடுத்தேன்.பத்து நாள்கழிச்சிதான் குடுத்தான் அந்த சேட்டா.!!

எனது கவிதைகள் இன்மை.காம் மே மாத இதழில்.ஆசிரியர் குழுவிற்கு ஆழ்ந்த நன்றிகள்..

 

http://www.inmmai.com/2014/05/blog-post_7834.html