Archive for July, 2014

கோலப்பொடிக்காரன்
கூப்பாடு போட்டபடி கடக்கிறான்

மேலவீட்டு தெய்வானை பாட்டி
பெருஞ்சிரிப்பு சிரிக்கிறாள்

கீழவீட்டில் கனகா இல்லை -அமைதி

பசுங்கன்றொன்று எங்கோ விசும்புகிறது

இரண்டாம் சுற்றில் கோலப்பொடிக்காரன்
இம்முறை எதிர் வீட்டு துரச்சிஅக்கா பேரம் பேசுகிறாள்

முற்றத்து முருங்கைமரம்

காற்றுடன் பேசும் ஒலிகூட கேட்கிறது

கூடத்தில் காய்ச்சலால்
ஒருக்களித்து கிடக்கும்
முருகம்மாவிற்கு

கூடவே வகுப்பறையில்
இந்நேரம் ஒலித்துக்கொண்டிருக்கும்
ஆதிலிங்க வாத்தியாரின் குரலும்..!!

கருப்பசாமி கோவிலின்
தெற்கு சுவரோரம் கிடந்த
சிமெண்ட் பெஞ்சின் அடியில்
குட்டி ஈன்ற பெட்டை நாயின் ஓலம்
அந்த அடைமழை இரவின்
இரைச்சலோடு சங்கமிக்க
ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்த
முருகம்மாளுக்கு அரைகுறையாய்
காதில் விழுந்தது
இரக்கமற்ற இரவு மழை
அந்தக் கண்திறவா குட்டிகளுக்கு
குளிரைத் தராமலிருக்க
அதே கருப்பசாமியிடம்
அப்போதே வேண்டிக்கொண்டாள்..!!

வாயகன்ற பித்தளைத் தவலையில்
தண்ணீர் சுமந்து வருவது
முருகம்மாளுக்கு பிடிக்காது
நடுக்கிணத்திலிருந்து நீர் இறைத்து
வீட்டை அடையும் முன்
அரைத்தவலை ஆகிவிடும்
பலமுறை இதற்காக
அம்மாவிடம் திட்டு வாங்கியிருக்கிறாள்
என்றாலும் நெகிழியாலான ஒருகுடமும்
நேற்று உடைந்ததால்
வேறு வழியற்று
இன்று அந்த பித்தளைத்தவலையில்
ஊதாப்பாவாடை நனைய
நீர் சுமந்து வருகிறாள்
தளும்பும் நீரைப்போல அவள் மனதும்
அடித்துக்கொள்கிறது
நாளைக் காலை பள்ளி செல்வதற்குமுன்
பாவாடை காய்ந்துவிடவேண்டும் என்று

வண்ணதாசன்

Posted: July 22, 2014 in கவிதை

இந்தக் கொடுமழை இரவில்

திறந்த ஜன்னலினருகே அமர்ந்து

ஜன்னல் கம்பி வழி கசிந்து வரும்

குளிர்ந்த நீரோடு

வண்ணதாசனை வாசிப்பது

பாணதீர்த்த அருவியின்

உச்சிமுகட்டிலிருந்து அருவி வழி

தலைகீழாய் தடாகத்தில்குதிப்பதுபோல்

அத்தனை பேரின்பம்..!!

சொல்வனம் 109வது இதழில் எனது சிறுகதை வந்துள்ளது.ஆசிரியர் குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள் 

http://solvanam.com/?p=34370

ஜூலை மாத இன்மை இதழில் எனது ஒரு கவிதை வந்துள்ளது.ஆசிரியர்க்கு நன்றிகள்

http://www.inmmai.com/2014/06/blog-post_8457.html