Archive for July 26, 2014

வாயகன்ற பித்தளைத் தவலையில்
தண்ணீர் சுமந்து வருவது
முருகம்மாளுக்கு பிடிக்காது
நடுக்கிணத்திலிருந்து நீர் இறைத்து
வீட்டை அடையும் முன்
அரைத்தவலை ஆகிவிடும்
பலமுறை இதற்காக
அம்மாவிடம் திட்டு வாங்கியிருக்கிறாள்
என்றாலும் நெகிழியாலான ஒருகுடமும்
நேற்று உடைந்ததால்
வேறு வழியற்று
இன்று அந்த பித்தளைத்தவலையில்
ஊதாப்பாவாடை நனைய
நீர் சுமந்து வருகிறாள்
தளும்பும் நீரைப்போல அவள் மனதும்
அடித்துக்கொள்கிறது
நாளைக் காலை பள்ளி செல்வதற்குமுன்
பாவாடை காய்ந்துவிடவேண்டும் என்று

Advertisements